பேராவூரணி செங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி புரவலருக்கு பாராட்டு விழா.

IT TEAM
0



பேராவூரணி செங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி புரவலர் தோழர் இன்பத்தமிழ் இளங்கோவன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 


ஊராட்சி மன்ற தலைவர் ஈகை செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் வாழ்த்துரை வழங்கினார். 


செங்கமங்கலம் ஊராட்சி, மேலத்தெருவில் கஜா புயலால் வீடு இழந்த மூன்று குடும்பங்களுக்கு ரூபாய் 14 லட்சம் மதிப்பில் புதிதாக வீடு கட்டி கொடுத்தது, மேலத்தெருவில் வசதியற்ற ஏழை எளிய குடும்பத்து மாணவர்களுக்கு மாலை நேர பயிற்சி பள்ளியை தொடர்ந்து நடத்தி வருவது, அந்த மாணவர்களுக்கு மாலை நேரத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்கி வருவது, செங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ஆழ்குழாய் கிணறு அமைத்துக் கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகளை செய்துகொடுத்தவர் இன்பத்தமிழ் இளங்கோவன். இவர் குவைத் நாட்டின் தேசிய வங்கியில் முதன்மை மேலாளராக பணியாற்றி வருகிறார். 


அதே நாட்டில் பணி செய்து வரும் செங்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த செல்வம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மேலத்தெரு பகுதியின் நிலையறிந்து அங்கு வாழும் மக்களுக்கு உதவி செய்து வருகிறார். 


மேலும் இப்பகுதியில் சமூக செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள இளைஞர்களை கொண்டு அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு தொடர்ந்து செயலாற்றி வருகிறார். 


இவரின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டிய சட்டமன்ற உறுப்பினர் இந்தப் பாராட்டு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்வதாக கூறினார்.


நிகழ்வில் வளைகுடா வானம்பாடிகள் சங்கத்தின் நிறுவனர் ஐயா செம்பொன்மாரி சேது, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பகவத்சிங், கவிஞர் செங்கை நிலவன், கே.பி.சேகர், பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் த.பழனிவேல், சித.திருவேங்கடம், இரா மாரிமுத்து, பாரதி அமர், இரா.மதியழகன், சிவக்குமார், வன்மீகநாதன், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன், மணக்காடு தலைமைஆசிரியர் மகாலிங்கம், தோழர் ராஜமாணிக்கம், மேலத்தெரு மாலை நேரப் பயிற்சிப் பள்ளி  ஆசிரியர் நாகவல்லி, மெய்ச்சுடர் நா. வெங்கடேசன், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். 


சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் ஈகை செல்வம்,  கல்வி புரவலர் இன்பத்தமிழ் இளங்கோவன் ஆகியோர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.


முன்னதாக பள்ளி ஆசிரியர் வெள்ளத்துரை வரவேற்றார், நிறைவாக ஆசிரியர் ராகவன்துரை நன்றி கூறினார்.

நன்றி: மெய்ச்சுடர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top