பேராவூரணி இருந்து வடகாடு வரை செல்லும் 2 ம் எண் பேருந்து ஆவணம் பெட்ரோல் பங் அருகில் வடகட்டில் இருந்து வரும் போது முன் சக்கர டயர் வெடித்தது ..
பயணிகளுக்கு எந்த வித காயமும் இன்றி தப்பினர் ...
பேராவூரணியில் இருந்து செல்லும் பேருந்துகள் அடிக்கடி இதுபோன்ற விபத்துக்களை சந்திக்கின்றன... பேருந்துகளை முறையாக பராமரிக்காததே இதற்கு காரணம்...
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேராவூரணி பணிமனை நிர்வாகம் பயணிகளின் நலன் கருதி பேருந்துகளை முறையாகப் பராமரிக்க வேண்டும்!
பேராவூரணி பணிமனையால் நிர்வகிக்கப்படும் ஒரு பேருந்துக்குள் மழை நேரத்தில் மழை நீர் ஒழுகும் நிலையை காணொளியாக ஒருவர் சமூக வலை தளத்தில் பதிவிட்டு பரபரப்பானது...
நமது வலைதளத்திலேயே... ஒரு அரசு பேருந்தை பயணிகள் சேர்ந்து தள்ளிவிட்டு இயக்கப்படும் நிலையை காட்சிப்படுத்தி இருந்தோம்...
அரசு நகரப் பேருந்துகள் மாணவர்கள் பயணிக்கும் பள்ளிப் பேருந்துகளுக்கு இணையானவை... இந்த பேருந்துகளை நம்பித்தான் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள் பெற்றோர்கள்...
பொதுமக்களின் நலன் கருதி அதிக கவனத்தோடு பேருந்துகளை பராமரித்து இயக்க வேண்டும் என பேராவூரணி பணிமனையை கேட்டுக்கொள்கிறோம்.
படம் மற்றும் தகவல்: செய்தித்தாள் முகவர் ச கணேசன்.