பேராவூரணி தென்னை பராமரிப்பு மானியம் பெறாத விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

IT TEAM
0


தென்னை பராமரிப்பு மானியம் பெறாத  விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் இரண்டாம் ஆண்டு தென்னை பராமரிப்பு மானி யம் பெறாத விவசாயிகள் உடனடியாக விண்ணப்பங் களை அளிக்கலாம் என பேராவூரணி வட்டார வேளாண்மை  உதவி இயக்குனர் (பொ)  எஸ்.ராணி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில், 2018 கஜா புயலால்  பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் புதிய கன்றுகள் நடவு செய்தமைக்கு கன்று ஒன்றுக்கு ரூ.50- வீதம்  இரண்டாம் ஆண்டு பராமரிப்பு மானியம் வழங்கப் படவுள்ளது. சென்ற ஆண்டு மேற் கண்ட பராமரிப்பு மானியம்  பெறாதவர்கள் தற்போது விண்ணப்பித்து பயன்பெறலாம். ரசாயன உரங்களான யூரியா 1.200கி, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ் 1 கிலோ, தென்னை நுண்ணூட்டம் 1 கிலோ உயிர் உரங்கள் கன்று  ஒன்றுக்கு 50 கிராம் ஆகிய உரங்களை தனியார் உர விற்பனை மையங்களில் வாங்கி, பி பி மெஷினில் இடப்பட்ட பட்டியலை பெற்று  சிட்டா, அடங்கல், உரம்  வைத்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம், வங்கி கணக்கு எண் நகல்  ஆகியவற்றுடன் விண்ணப் பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு வேளாண் உதவி இயக்குநர், வேளாண் அலுவலர், துணை வேளாண் அலுவ லர் மற்றும் வேளாண் உதவி  அலுவலர்களை அணுகி விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்கு நர் (பொ) எஸ்.ராணி தெரி வித்தார்.


நன்றி:தீக்கதிர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top