உரம் தட்டுப்பாடு தொடர்பாக வாட்ஸ்அப்பில் புகார் செய்யலாம்: தமிழக அரசு அறிவிப்பு

IT TEAM
0


உரம் தட்டுப்பாடு தொடர்பாக வாட்ஸ்அப்பில் புகார் செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மாநில அளவில் உரம் தொடர்பான தகவல்களை பெறவும், புகார்களை தெரி வித்து நிவர்த்தி செய்து கொள்வதற் ்காகவும் உர உதவி மையம், சென்னை, வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் புகார்களை வாட்ஸ்அப் செயலி மூலமாகவும் பதிவு  செய்திடலாம். விவசாயிகள் தெரிவிக்கும் புகார்களை பதிவு செய்து உடனுக்குடன்  தீர்வு வழங்குவதற்காக அலுவலர் ஒரு வரும் தனியாக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, வேளாண் பெருங்குடி மக்கள்  உரம் தொடர்பான தகவல்கள் மற்றும்  புகார்களை 91 93634 40360 என்ற  அலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு வாய்மொழியாகவும் மற்றும் வாட்ஸ்அப் செயலி மூலமாகவும் தெரிவித்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top