ஆஸ்திரேலியா தமிழ் மரபு மாதம் என்றொரு அஞ்சல்தலையை 15 தை 2022 தேதியிட்டு வெளியிட்டிருக்கிறது. வள்ளுவப் பேராசான் படமும் அ எழுத்து படர் பசுங்கொடி, ஒன்றுடன் இணைந்துள்ளது.கரகம் பறை உருமி நடனமிடும் குழுவொன்றுக்கு இசைப்பது முரசு முழவு இசைக்கருவிகள் ஆடுமகள் சிலம்பம் மற்பயிற்சி? அல்லது கபடி போன்ற ஒன்றின்விளையாட்டுக்குழு,யாழ்,பொங்கல் பானை, கரும்பு கயல் வில் புலிச் சின்னம் உழவர் தஞ்சைக் கோபுரம் ஏறு தழுவும் இளைஞனுடன் அழகுறத்தமிழர் மரபைக்காட்டியமைந்துள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாய் அஞ்சல்தலையின் வலப்பக்க மேற்புறம் கங்காரு கதிரவன் வரையப்பட்ட ஆஸ்திரேலியப் பூர்வகுடிமக்களின் வளைதடி பூமராங் அமைந்துள்ளது. இதே வடிவு வளரி என்னும் பெயரில் நம்மிடம் இருந்தது. எந்தத் தொடர்பைச்சுட்ட வடிவமைத்தவர் விரும்பியிருப்பினும் மகிழ்ச்சியோடு நன்றி கூரவே வேண்டும். நன்றி
படம் நண்பர் கண்ணன் புலனத்தில் குழுவுக்கு அனுப்பியது. அவருக்கும் நன்றி