பொங்கல் வாழ்த்து அட்டைகளை நினைவிருக்கிறதா? - இழந்துவிட்ட ஒரு அழகியல்!
தமிழர்களின் முக்கியமான பண்டிகை பொங்கல். போகி, சூரியன் பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என தொடர்ந்து நான்கு நாட்கள் தமிழ்நாடே திருவிழா கோலமாகும். தமிழகத்தின் ஒவ்வொரு வீடுகளும் சுத்தம் செய்யப்பட்டு, புது வண்ணம் பூசி விசேச வீடுகள் போல் காட்சியளிக்கும். சூரியனுக்கு நன்றி, கால்நடைகளுக்கு நன்றி என இயற்கையோடும், வாழ்வியலோடும் ஒன்றிப்போன பொங்கல், நாளுக்கு நாள் விடுமுறை தினமாக மாறி வருகிறதோ என்ற ஐயம் அவ்வப்போது வருவதும் உண்டு.