பிப்ரவரி.1 முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு. பிப்ரவரி 1ம் முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும். பிப்ரவரி 1 முதல் 20க்குள் செமஸ்டர் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும்- உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. ஒவ்வொரு பல்கலைக்கழகத்தில் நடத்திய பாடங்களில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும். கிராமப்புற மாணவர்கள் அப்லோட் செய்த விடைத் தாள்கள் வந்து சேர்வது தாமதமானாலும் பெற்றுக்கொள்ளப்படும்- அமைச்சர் பொன்முடி. ஆன்லைன் தேர்வு முறையில் தவறுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரி இறுதியாண்டு தேர்வு நேரடியாக சுழற்சி முறையில் நடத்தப்படும் - அமைச்சர் பொன்முடி.