பேராவூரணியில் பெய்த கன மழையின் காரணமாக கடலை விதைத்த விவசாயிகள் கவலை.

IT TEAM
0






கடலை விதைத்த விவசாயிகள் கவலை

பேராவூரணியில் பெய்த பேய் மழையின் காரணமாக கடலை விதைத்த விவசாயிகள் கவலையில் மூழ்கி உள்ளனர். 


கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மழை இல்லாமல் இருந்ததாலும் கடலை விதைக்க ஏற்ற சூழல் இது என உணர்ந்து கடலை விதைத்தனர்.  


உரிய வானிலை முன்னறிவிப்புகள் இல்லாமல் போனதால் ஏக்கருக்கு சுமார் 20 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்து கடலை அரிசி விதைத்தவர்கள் கவலையில் தோய்ந்து உள்ளனர். 


இதுகுறித்து ரெட்டவயல் விவசாயி மாரிமுத்து கூறியதாவது...


மானாவாரி பயிர்களுக்கு அரசு எவ்வித உதவியும் செய்வதில்லை. கடலை விதைக்க விதை மானியம் கூட வழங்குவதில்லை. ரெட்டவயல் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் கடலை விதைத்துவிட்டு கண்ணீரோடு நிற்கிறோம் என்றார். 

கடலை விதைக்க ஏற்பட்ட செலவுகள் குறித்து அவர் கூறியதாவது.. 

முதல் நடவுக்கு ரூபாய் 4000

அடி உரம் ரூபாய் 4000

விதைக் கடலை ரூபாய் 10000

நடவு உழவு 4000

கூலி 2000 

குறைந்தபட்சம் ஒரு ஏக்கருக்கு இந்த செலவுகளை செய்திருக்கிறோம் என்கிறார் கவலையோடு. 


உணவை உற்பத்தி செய்யும் உழவர்கள் கண்ணீரோடு இருப்பது தேசத்தின் நலனுக்கு நல்லதல்ல. 


உணவு உற்பத்திக்காக ஓடாய் உழைக்கும் உழவர்களின் வாழ்வுக்காக ஒன்றிய மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 


சூழலியல் மாற்றங்களால் உலகமே சுழன்று கொண்டிருக்க உரிய முன்னறிவிப்புகளையாவது உரிய நேரத்தில் வழங்க வேண்டியது அவசியமாகும்.


இந்த நாட்டின் தலைமை அமைச்சருக்கு வழங்கப்படும் மகிழுந்துக்கு காட்டும் அக்கறையை கூட வேளாண் குடிமக்கள் மீது காட்டுவது இல்லையே என்பதுதான் சமூக ஆர்வலர்களின் குமுறலாக உள்ளது.


படம்: குளம் போல் காட்சியளிக்கும் வயல்வெளிகள்

நன்றி: மெய்ச்சுடர்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top