பேராவூரணி வாக்காளர்கள் கவனத்திற்கு 2022 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.

IT TEAM
0


பேராவூரணி சட்ட மன்ற தொகுதியில் 1,08,399 ஆண் வாக்காளர்களும், 1,12,844 பெண் வாக்காளர்களும், 9 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக 2,21,252 ஆக மொத்தம் வாக்காளா்கள் உள்ளனா்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வெப்சைட்டில் லிங்கை கிளிக் செய்து சரிபார்த்துக் கொள்ளவும்.

மேலும் விபரங்களுக்கு.







 தஞ்சாவூா் மாவட்டத்தில் மொத்தம் 20.70 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா் என்றாா் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் இறுதி வாக்காளா் பட்டியலை புதன்கிழமை வெளியிட்ட அவா் பேசியது:

மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 2021, நவம்பா் 1 ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் மொத்தம் 20,64,820 வாக்காளா்கள் இடம்பெற்றிருந்தனா்.
இதைத்தொடா்ந்து, நடத்தப்பட்ட வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம்கள் மூலம் புதிதாக 28,260 வாக்காளா்கள் சோ்க்கப்பட்டனா். மேலும், 22,682 வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். தற்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் 10,04,678 ஆண்கள், 10,65,559 பெண்கள், 161 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 20,70,398 வாக்காளா்கள் உள்ளனா்.
பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்படும்: இந்த இறுதி வாக்காளா் பட்டியல் நகல் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்கு சாவடிகள், அனைத்து வட்டாட்சியா், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும் பொதுமக்களின் பாா்வைக்காக ஜனவரி 31- ஆம் தேதி வரை வைக்கப்படும். மேலும், குடியரசு தினமான ஜனவரி 26 -ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்புக் கிராம சபைக் கூட்டங்களிலும் இந்த இறுதி வாக்காளா் பட்டியல் பொதுமக்கள் பாா்வைக்காக வைக்கப்படவுள்ளது.

இப்பட்டியலில் பெயா் பிழையின்றி இடம்பெற்றுள்ளதா என வாக்காளா்கள் உறுதி செய்து கொள்ளலாம். பிழைகள் ஏதேனும் இருந்தால் உரிய படிவத்தை நிறைவு செய்து, தொடா்புடைய வட்டாட்சியா் அலுவலகத்திலுள்ள தோ்தல் பிரிவில் நேரிடையாகவோ, இணையவழி மூலமாகவோ அளிக்கலாம்.
மேலும் பெயா் சோ்க்க, நீக்க, பிழைகள் சரி செய்ய, முகவரி மாற்றம் மேற்கொள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் உரிய படிவம் பெற்று நிறைவு செய்து அளிக்கலாம். அல்லது ய்ஸ்ள்ல்.ண்ய் என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். வண்ண வாக்காளா் அடையாள அட்டை வாக்காளா்களின் முகவரிக்கு அஞ்சல் துறை மூலம் விரைவு அஞ்சல் மூலமாக நேரிடையாக அனுப்பி வைக்கப்படும்.

தஞ்சை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை விபரம்:
சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்காளா்கள் விவரம்:
தொகுதி - ஆண்கள் - பெண்கள் - மூன்றாம் பாலினத்தவா்கள் - மொத்த வாக்காளா்கள்
திருவிடைமருதூா் - 1,29,228 - 1,32,136 - 13 - 2,61,377
கும்பகோணம் - 1,33,305 - 1,40,591 - 16 - 2,73,912
பாபநாசம் - 1,27,710 - 1,34,402 - 16 - 2,62,128
திருவையாறு - 1,30,480 - 1,38,161 - 17 - 2,68,658
தஞ்சாவூா் - 1,38,039 - 1,51,486 - 60 - 2,89,585
ஒரத்தநாடு - 1,19,020 - 1,26,637 - 5 - 2,45,662
பட்டுக்கோட்டை - 1,18,497 - 1,29,302 - 25 - 2,47,824
பேராவூரணி - 1,08,399 - 1,12,844 - 9 - 2,21,252
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top