தமிழ் நாட்காட்டி அறிமுக விழா.
உலக வரலாற்றின் காலத்தை எல்லாம் வென்று நிற்கும் தமிழர்களின் வானவியல் அறிவை வின்னதிர பறைசாற்றும் விழா..
தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்களை தரணிக்கு அறிவிக்கும் விழா...
கல்வெட்டில் கண்டதை காட்சிப்படுத்தும் விழா...
மரபை மறந்த தமிழர்களை மீட்டெடுக்கும் விழா...
திருவள்ளுவர் தொடர் ஆண்டினை தொட்டுத் தொடர தமிழர்களை அழைக்கும் விழா...
நம் முன்னோர்கள் வகைப்படுத்தி வைத்திருக்கும் வானியல் அறிவுக்கு விளக்கமாய் அமைந்திடும் இந்த விழாவில் அனைவரும் பங்கேற்போம்.
நமது எண்களின் வரிவடிவங்களை நமது இல்லங்களில் காட்சிப்படுத்துவோம்.
நாளை காரிக்கிழமை (சனிக்கிழமை) மாலை 3.00 மணிக்கு பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்...
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் தமிழ் நாட்காட்டியை வெளியிட...
பேராவூரணி வருவாய் வட்டாட்சியர் நாட்காட்டியை பெற்றுக்கொள்கிறார்...
சீர்மிகு இந்த விழாவை சிறப்பித்திட வாருங்கள்...
தமிழ்வழிக் கல்வி இயக்கம் அன்போடு அழைக்கிறது...
நன்றி: மெய்ச்சுடர்