திருக்குறளை வாழ்வியலாக மேற்கொள்ள வேண்டும் - திருவள்ளுவர் நாள் விழாவில் பேச்சு.
திருக்குறளை மேற்கோள் காட்டுவதற்காக மட்டும் பயன்படுத்தாமல் வாழ்வியலாகக் கொள்ள வேண்டும் என்றார் பேராவூரணி திருக்குறள் பேரவை பொறுப்பாளர் எச் சம்சுதீன்.
திருவள்ளுவர் நாளை முன்னிட்டு பேராவூரணி திருக்குறள் பேரவை சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
பேராவூரணி தர்ஷனா மருத்துவமனை வளாகத்திற்குள் திருக்குறள் ஆர்வலரும், சிறந்த தமிழ் பற்றாளருமான மருத்துவர் துரை நீலகண்டன் அவர்களால் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வுக்கு திருக்குறள் பேரவை தலைவர் மு தங்கவேலனார் தலைமை ஏற்றார்.
மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் வரவேற்றார். மருத்துவர் துரை நீலகண்டன், திருக்குறள் பேரவை பொறுப்பாளர்கள் ஆறு. நீலகண்டன் சித.திருவேங்கடம், முனைவர் ச கணேஷ்குமார், தா.கலைச்செல்வன், கோ.செந்தில்குமார், இரா.மாரிமுத்து, இரா மதியழகன், அ.கோவிந்தன், விவேக் மற்றும் தமிழ்வழிக் கல்வி இயக்க பொறுப்பாளர்கள் த பழனிவேல், பாரதி ந.அமரேந்திரன், இந்திராநகர் சிவக்குமார், நகர வர்த்தக கழக மேனாள் பொறுப்பாளர்கள் ஆர்.பி.ராஜேந்திரன், எஸ்.ஜகுபர்அலி, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர்கள் மோகன், பெத்தபெருமாள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், தமிழ் மொழியை நடுவன் அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் பரிசுத் தொகையை 10 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனை வளாகத்திற்குள் திருவள்ளுவர் சிலையை அமைத்த மருத்துவர் துரை. நீலகண்டன் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
திருவள்ளுவர் ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தமிழ் நாள்காட்டி நிகழ்வில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
நிறைவாக திருக்குறள் பேரவை மேனாள் செயலாளர் கொன்றை சண்முகம் நன்றி கூறினார்.
நன்றி: மெய்ச்சுடர்