பேராவூரணியில் இருந்து 12 கி.மீ தொலைவில் மல்லிபட்டினத்திற்கு அருகே அமைந்துள்ளது இந்த புதுப்பட்டினம் கடற்கரை.
பட்டுக்கோட்டையில் இருந்து 18 கி.மீ தொலைவில் மல்லிபட்டினத்திற்கு அருகே அமைந்துள்ளது இந்த புதுப்பட்டினம் கடற்கரை.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 45 கிலோ மீட்டர் நீளத்தில் வங்க கடலின் கடற்கரை அமைந்துள்ளது. இதில் பெரும்பாலான கடற்கரை பகுதி சதுப்பு நிலங்கள் (மாங்குரூவ் காடுகள்) சூழ்ந்துள்ளன. அதனால் அங்கங்கே சிறு கடற்கரை பகுதி மட்டுமே மக்கள் செல்ல முடியும்.
இங்குள்ள கடற்கரைப் பகுதி கடந்த சில மாதங்களாக பிரபலமடைந்து வருகிறது. முன்பைவிட சுத்தமாக உள்ளது கடற்கரை பகுதி.
அமைதியான சூழல், கடற்காற்று, அருகில் உள்ள தென்னந்தோப்புகளின் நிழல், 2 கி.மீ தொலைவுக்கு வெண்ணிற மணற்பரப்பு, ஆர்ப்பாட்டம் இல்லாத அலைகள் என அனைவரையும் இந்த கடற்கரை வசீகரித்து வருகிறது.
இதனால், விடுமுறை நாட்களில் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கார், வேன்களில் புதுப்பட்டினம் கடற்கரைக்கு வருகின்றனர்.
இங்கிருந்து 2கி.மீ தொலைவில் மல்லிபட்டினம் மீன்பிடி துறைமுகம் மற்றும் 6கி.மீ தொலைவில் மனோரமா கோட்டை அமைந்துள்ளது.