பேராவூரணி தோ்வுநிலைப் பேரூராட்சி சாா்பில் என் குப்பை- என் பொறுப்பு என்ற தலைப்பிலான விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவா் சாந்திசேகா் பேரணியைத் தொடக்கி வைத்தாா். செயல் அலுவலா் பழனிவேலு, துணைத் தவைா் கி.ரெ.பழனிவேல், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் சாந்தி முன்னிலை வகித்தனா்.
பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கிய பேரணி கடைவீதி, ரயிலடி, புதிய பேருந்து நிலையம் வழியாகச் சென்று, மீண்டும் பேரூராட்சி அலுவலகத்திலயே முடிவடைந்தது.
மாணவிகள், தூய்மைப் பணியாளா்கள், மகளிா் சுய உதவிக்குழுவினா் விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தி பேரணியில் பங்கேற்றனா். தொடா்ந்து உறுதிமொழியேற்கப்பட்டு, தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.
பேரூராட்சி உறுப்பினா்கள் ஹபீபா பாரூக், முருகேசன், பழனிவேல் சங்கரன், ரம்யா அரவிந்தன், ராஜலெட்சுமி ராமமூா்த்தி, பேரூராட்சிப் பணியாளா்கள், அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியை ரெங்கேசுவரி உள்ளிட்டோா் பேரணியில் கலந்து கொண்டனா்.