பேராவூரணியில் தொழில் முனைவோர் வழிகாட்டி கருத்தரங்கம் 07.08.2022
தொழில் முனையும் கனவு எல்லோருக்குமே இருக்கும். வென்றவர்களைப் பார்த்தால் ஆர்வம் வரும்;
முயன்று தோற்றவர்களைப் பார்த்தால் பயம் வரும்.
எப்படி வென்றார்கள், ஏன் தோற்கிறார்கள் என எப்படித் தெர்ந்து கொள்வது, யாரிடம் கேட்பது எனும் குழப்பம்.
இதனாலேயே பலரின் தொழில் முனைவுக் கனவு மனதிற்குள்ளேயே உறங்கி விடுகிறது.
தொழில் செய்ய மாநகரங்களும் நகரங்களும்தான் சரியான இடங்கள் எனும் நம்பிக்கையும் நமக்குள் எப்போதும் உண்டு.
இதையெல்லாம் கடந்து "நம் ஊரிலேயே நம்மிடம் இருக்கும் வளங்களை அடிப்படையாகக் கொண்டு நம்மால் வெற்றிகரமாக தொழில் முனைய
முடியும்' எனும் சூழலை தொழில் நுட்பங்களும் தொலைத் தொடர்புகளும் இப்போது வழங்கியுள்ளன.
இவை குறித்து நம் பகுதி ஆர்வலர்கள் இணைந்து ஒரு குழுவாக செயல்படத் தொடங்கியுள்ளோம். அதன் முதல் கலந்துரையாடல் வரும் ஞாயிறு (07/08/22) அன்று பேராவூரணியில் நடைபெறுகிறது.
விருப்பமுள்ள ஆண், பெண் இருபாலரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
அன்புடன்,
டெல்டா புத்தொழில் குழு
(Delta Startup Club)
Post: Ramkumar