பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 17-08-2022 நேரடி மாணவர்கள் சேர்க்கை.
பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை வரும் 17-08-2022 நடைபெற உள்ளது.
பேராவூரணி அரசு கல்லூரியில் பி.ஏ., (தமிழ்), பி.ஏ.,(ஆங்கிலம்), பி.காம்.,பி.பி.ஏ., ஆகிய நான்கு கலைப் பிரிவுகளும், பி.எஸ்சி.,(இயற்பியல்), பி.எஸ்சி., (வேதியியல்) , பி.எஸ்சி., (கணிதம்), பி.எஸ்சி., (கணினி அறிவியல்) ஆகிய பாடப் பிரிவுகள் உள்ளன.ஏற்கெனவே விண்ணப்பித்தவா்களுக்கு இரண்டு கட்டமாக கலந்தாய்வு முடிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய இடங்களுக்கு, 17-08-2022 அன்று மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதுவரை இணைய வழியில் கல்லூரியில் சோ்வதற்கு விண்ணப்பிக்காதவா்களும், இக்கலந்தாய்வில் கலந்து கொண்டு நேரடி சோ்க்கை பெறலாம். இவா்களுக்கான விண்ணப்பம், ஆக.17-08-2022 அன்று கல்லூரியில் வழங்கப்படும்.