தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் மருங்கப்பள்ளம் கிராமத்தில் உள்ள தாமரைக்குளத்தை சீரமைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த குளத்தின் நடுவே ஒரு குறுங்காடு அமைத்தோம். இன்று அந்த குறுங்காட்டிலும், குளத்தின் நான்கு கரைகளிலும் மரக்கன்றுகள் வைத்தோம். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குறிய திரு. Peravurani N.Ashokkumar MLA அவர்கள் முதல் மரக்கின்றனை வைத்து துவங்கி வைத்தார். சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் திரு முகி முத்துமாணிக்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சடையப்பன் கிராம வளர்ச்சி, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.கிருஷ்ணமூர்த்தி வட்டார வளர்ச்சி, ஒன்றிய குழு உறுப்பினர் திரு. செந்தில்நாதன், ஊராட்சி தலைவர் திரு. சுரேஷ் , சமூக ஆர்வலர்களும் மற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டு மரக்கன்றினை வைத்தனர். அனைத்து வேலைகளையும் செய்த மருங்கப்பள்ளம் ஊராட்சி நூறு நாள் வேலைவாய்ப்பு திட்ட உறுப்பினர்களுக்கும் களத்தில் வேலை செய்த சகோதரர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
Bounce Back Delta / Bounce Back Thamirabarani 💚💙❤️
#Peravuranitown