இந்தியாவில் நீர் மேலாண்மையில் தலை சிறந்து விளங்கும் 10 நபர்களை
The Better India என்கின்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதில் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர் நிமல் ராகவன் இந்திய அளவில் பங்கேற்கும் தமிழர் இவர் மட்டுமே..
இந்தியாவில் பெரும் பொருளாதார பின்னணியை கொண்டவர்கள் மத்தியில் 35 வயதான இளம் தமிழராக போட்டியிடுகிறார் நிமல் ராகவன்
யார் இந்த நிமல் ராகவன் Nimal Raghavan
டெல்டா மாவட்டங்களில் கஜா புயலின் பொழுது சமூக ஆர்வலர்கள் பலர் உணவு உடைகளை சேகரித்து கொண்டிருந்தனர் ஆனால் நிமல் ராகவன் புயலினால் விழுந்த மரங்களை எப்படி மீண்டும் உருவாக்குவது என்று நினைத்து ஓடிக் கொண்டிருந்தார். பல இயற்கை ஆர்வலர்களின் ஆலோசனை படி விழுந்த மரங்களை மீண்டும் அதே இடத்தில் நடவு செய்ய பல விவசாயிகளுக்கு உதவினார். பல்லாயிரக்கணக்கான மரக்கன்றுகளை பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கு அளித்து இயற்கை வளங்களை மீட்டெடுக்க வழிவகை வகுத்தவர்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் பல ஆண்டு காலமாக தூர்வாரப்படாமல் இருந்த பேராவூரணி பெரிய குளத்தை கைஃபா என்னும் கடைமடை பகுதி விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து தூர்வாரி அதிலும் வெற்றி கண்டவர் இதன் மூலம் தஞ்சாவூர் டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் நன்கு அறியப்பட்ட நிமல் ராகவன் அவரது பணியை அத்துடன் நிறுத்தவில்லை.
நம் இழந்த இயற்கை வளங்களை மீட்டெடுக்க பல லட்சம் விதைப்பந்துகளை seed balls இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தூவி வருகிறார்.
நிமல் ராகவனின் அறிவாலும் சிறந்த மொழி திறனாலும் ஈர்க்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் இவர் சார்ந்த அமைப்பிற்கு JCB எந்திரத்தை பரிசாக கொடுத்தனர். இந்த ஜேசிபி எந்திரத்தின் மூலம் தஞ்சை மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள பெருவாரியான நீர் நிலைகளையும் தூர்வாரி சுத்தப்படுத்தி வருகிறார் நிமல் ராகவன் இவர் சேவை இந்தியா முழுவதும் விரிவடையட்டும்.
இந்தியாவின் ஏரி மனிதன் என்று புகழப்படும் நிமல் ராகவன் தமிழகத்திற்கு கிடைத்தது தனிச்சிறப்பு.
இந்தியாவின் முதன்மையான தலைசிறந்த நீர் மேலாண்மை ஆர்வலராக தேர்ந்தெடுப்போம்..
வாக்களிக்க நம் செய்ய வேண்டியவை..
கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும். 👇
Vote now என்கின்ற பட்டனை பயன்படுத்தி நிமல் ராகவன் அவர்களின் படத்திற்கு கீழ் உள்ள vote என்கின்ற பட்டனை அழுத்தி மெயில் ஐடியை பதிவு செய்தால் உங்கள் மெயில் ஐடிக்கு ஓடிபி வரும் Spam அல்லது all mail அந்த ஓடிபி இடம் பெற்றிருக்கும் அந்த எண்ணை பயன்படுத்தி vote வாக்களிக்கவும்..