பேராவூரணியில் சுதந்திரதினம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

IT TEAM
0



இந்திய நாட்டின் 75 வது சுதந்திர தின விழா தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதைப்போலவே நமது பேராவூரணியிலும் சுதந்திர தின நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பேராவூரணி நகரில் அமைந்துள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், பேராவூரணி வட்டாட்சியர் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். இவ்விழாவில் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதைப்போலவே பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகம், பேராவூரணி காவல்நிலையம், பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம், பேராவூரணி சார்பதிவாளர் அலுவலகம், பேராவூரணி அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, பேராவூரணி வட்டார வேளாண் விரிவாக்க மையம் மற்றும் பல அரசு அலுவலகங்களிலும் சுதந்திரதின விழாக்கள் சிறப்பாக நடைபெற்றது.

பேராவூரணியில் அமைந்துள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, டாக்டர்.ஜே.ஸி.குமரப்பா மேல்நிலைப்பள்ளி, வீ.ஆர்.வீரப்பா நினைவு மேல்நிலைப்பள்ளி, அட்லாண்டிக் சர்வதேச பள்ளி, வெங்கடேஷ்வரா கல்வி நிறுவனங்கள் மற்றும் பல அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளிலும் சுதந்திர தின விழா சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த விழாக்களில் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பல வித போட்டிகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாக்களில் பள்ளி முதல்வர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விழாவை சிறப்பித்தனர்.


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top