தீபாவளி சிறப்பு விரைவு ரயில்.
சென்னையில் இருந்து கடலூர், திருவாரூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி,காரைக்குடி வழியாக ராமேஸ்வரத்திற்கு ரயில் இயங்க உள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து இந்த ரயில் இயங்க உள்ளது.. எனவே பொதுப்பெட்டியில் டிக்கெட் வாங்கி பயணிக்க விரும்புவோர் சென்ட்ரல் சென்று இடம் பிடித்து ஏறி வரலாம்.
23 ஆம் தேதி ஞாயிறு இரவு 8.45 க்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, 9.25 க்கு எழும்பூர் வரும். அங்கிருந்து 9.40 க்கு புறப்பட்டு திங்கள் கிழமை அதிகாலை 05.03 க்கு பட்டுக்கோட்டை வந்து சேரும்..
இதே ரயிலை பயன்படுத்தி தீபாவளி அன்று காலையில் அதிராம்பட்டினம், பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி,ராமநாதபுரம், ராமேஸ்வரம் செல்வோர் இதே ரயிலை பயன்படுத்தி பயணிக்கலாம்..
இந்த ரயிலில் 2 இரண்டாம் வகுப்பு ஏசி, 4 மூன்றாம் வகுப்பு ஏசி, 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி(sleeper), 2 முன்பதிவற்ற பொதுப்பெட்டி, 1 பெண்கள்/மாற்றுத்திறனாளி பெட்டிகள் என 20 பெட்டிகள் கொண்டு இயக்கப்பட உள்ளது. கட்டணம் சிறப்பு ரயில் கட்டண முறைப்படி வசூலிக்கப்படும்..