நம்ம மனோரா!
1815ம் ஆண்டு ஜூன் 18 அன்று மாவீரன் நெப்போலியன் மற்றும் பிரிட்டிஷ் படைகளுக்கு இடையேயான போர் தற்போதைய பெல்ஜியம் நாட்டின் வாட்டர்லூ என்ற பகுதியில் நடந்தது.
நெப்போலியனின் மனைவி ஜோசபின் அந்தக் காலக்கட்டத்தில் வேறொரு நபருடன் தொடர்பில் இருந்தாள். பிரிட்டிஷ் இராணுவ ஜெனரல் வெலிங்டன் அந்த நபரின் மூலமாக நெப்போலியனின் போர் வியூகங்களை துப்பறிந்து கொண்டார்.
அன்று காலை நல்ல மழை பெய்தது. ஜோசபின் நெப்போலியனிடம் மழை பெய்த நிலம் காயும் வரை போரை ஒத்திவைத்து நண்பகலில் போரைத் துவங்குங்கள் என்றாள். நெப்போலியன் காலதாமதம் செய்த அந்தப் பொழுதில் பிரிட்டிஷ் படை மழையில் மூழ்கிய நிலத்தில் முன்னேறி வந்து விட்டது. பிற்பகலில் நெப்போலியனின் பிரெஞ்சுப் படை வலுவான தாக்குதலை மேற்கொண்ட போதும் பிரிட்டிஷ் படையின் அதிரடியைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறியது.
நெப்போலியனின் முக்கியமான தளபதியான மைக்கேல் நேய் சுற்றிவளைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான். இந்த அதிர்ச்சியை நெப்போலியனால் தாங்க முடியவில்லை. இனி போரில் பின்வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை. தோல்வி நேரக் கூடிய சூழலில் இறுதித் தாக்குதலுக்காக ஒரு பெரும் படையை இரகசியமாக பதுங்கியிருக்கச் செய்திருந்தார் நெப்போலியன். ஆனால் அந்தப் படையும் வரவில்லை. அது எதனால் என்று கண்டுபிடிக்கவும் அவருக்கு நேரமில்லை.
தனக்கு எதிரான மனைவியின் சதியை கையறு நிலையில் உணர்ந்து கொண்ட நெப்போலியன், குதிரையை விட்டுக் கீழே இறங்கினார்.
“எல்லாம் முயற்சித்துவிட்டேன் இனி செய்ய ஒன்றுமில்லை!”
நெப்போலியன் கைது செய்யப்பட்டு ஹெலனா தீவில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். உடல் நலக் குறைவினால் அங்கேயே இறந்து போனார்.
இந்தக் காலக்கட்டத்தில் தமிழகத்தில் தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னர், நெப்போலியனுக்கு எதிரான பிரிட்டிஷாரின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் நினைவுத் தூண் ஒன்றினை எழுப்பினார். இப்போது அது 'மனோரா' என்று அழைக்கப்படுகிறது.
பேராவூரணியிலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் கடற்கரை சாலையில் மனோரா அமைந்திருக்கிறது. 2004 சுனாமியில் பேரழிவைச் சந்தித்த மனோரா பின்னர் புதுப்பிக்கப்பட்டது.
-இரா.குண அமுதன்.
#Nammamanira #Manora #Manoraupdates #Manorapictures #manoratourist #Thanjavur