அரிமா சங்கம் உதவியுடன் பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தொலைக்காட்சி காணொளி மூலம் கற்றல் செயல்முறை
கல்வித் தொலைக்காட்சி மற்றும் கல்விச் செயலிகள் மூலம் கற்றல் நடைமுறை மாணவர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
செயல்வழி கற்றலுக்கு இணையாக காட்சிகள் வழியாக கற்றல் முறை கற்பித்தலை எளிமைப்படுத்தி இருக்கிறது.
இணையம் உலகளாவிய கற்றல் மற்றும் கற்பித்தல் வாய்ப்புகளை குவித்து வருகிறது.
இணையத் தொடர்புடன் கூடிய தொலைக்காட்சி இவற்றை எளிதில் சாத்தியப்படுத்தி விடுகிறது.
ஒரு அரசுப் பள்ளியில் மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கு இணையத் தொடர்புடன் கூடிய தொலைக்காட்சி பெரும் துணையாக இருக்கிறது.
இதனை கருத்தில் கொண்டு பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு வேண்டுகோளுக்கு இணங்க அரிமா சங்கம் பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இணையம் பயன்படுத்தும் வகை கொண்ட வண்ணத் தொலைக்காட்சி வசதியை செய்து கொடுத்திருக்கிறது.
லயன்ஸ் சங்க தலைவர் ஆசிரியர் இராமநாதன் உள்ளிட்ட ஒவ்வொரு பொறுப்பாளர்களுக்கும் உறுப்பினர்களுக்கும், இந்த வசதியை இப்பள்ளியில் மேம்படுத்துவதற்கு துணை நின்ற அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
செய்தி: மெய்ச்சுடர்