தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தையொட்டி கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் பத்திரிக்கையாளர்களுக்கு வாழ்த்து.
தேசிய பத்திரிக்கையாளர்கள் தினத்தை முன்னிட்டு,பேராவூரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் பேராவூரணி பத்திரிக்கையாளர்களுக்கு, சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். சங்கச் செயலாளர் எம் .எஸ். ஆறுமுகம் தலைமையில், மாவட்டத் தலைவர் எம். நீலகண்டன், சாசன பொருளாளர் எஸ். மைதீன் பிச்சை, சங்கச் பொருளாளர் சங்கர் ஜவான் ,டிவி குமார், சபரி முத்துக்குமார், சங்கத்தின் முதல் துணைத் தலைவர் தெட்சிணாமூர்த்தி மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு பேராவூரணி பத்திரிகையாளர்களை கௌரவித்து அவர்களுக்கு சார்பு அணிவித்து எழுதுகோல் வழங்கி இனிப்பு தந்து மரியாதை செய்தனர் நிகழ்வில் மூத்த பத்திரிகையாளர்கள் கான்முகமது, ஜகுபர் அலி, பழனியப்பன், ராஜா, முனைவர் வேத.கரம்சந்த் காந்தி மற்றும் பலர் கௌரவிக்கப்பட்டனர்.
முனைவர்
வேத கரம்சந்த் காந்தி
செய்தியாளர்