பேராவூரணி அருகே ஆதனூரில் புத்தாண்டு விழா நிகழ்ச்சிகள்.

IT TEAM
0




பேராவூரணி அருகே ஆதனூரில் புத்தாண்டு விழா நிகழ்ச்சிகள்.


 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஆதனூர் புனித அன்னாள் ஆலயத்தில் புத்தாண்டு நிகழ்வு நடைபெற்றது. புத்தாண்டை வரவேற்கும் வகையில், டிசம்பர் 31 அன்று இரவு 11 மணிக்கு, கோவில் பிள்ளை ராஜசிங்கம் அவர்களின் ஜெபத்துடன் தொடங்கி, ஆதனூர் புனித அன்னாள் ஆலய பங்குத்தந்தை அருட்திரு ஆரோக்கியசாமி துரை அடிகளார் அவர்களின் சிறப்பு புத்தாண்டு திருப்பலி நடைபெற்றது. திருப்பலி முடிந்தவுடன், அனைவருக்கும் கேக் மற்றும் தேனீர் வழங்கி புத்தாண்டு கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, பங்குத்தந்தை ஆரோக்கியசாமி துரை, அருட்திரு சகோதரிகள் சுப்பீரியர் ஏஞ்சல் மேரி, புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெசி லிட்டில் ரோஸ், புனித அன்னாள் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ராபர்ட் கிளாரா மற்றும் மருத்துவ அருட்சகோதரி சசிகலா, கோவில்பிள்ளை ராஜசிங்கம், மணி அடிப்பவர் துரைராஜ் ஆகியோருக்கு சால்வை அணிவித்து, பழத் தட்டுகள் வழங்கி, சிறப்பு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜனவரி 1 காலை 8:30 மணிக்கு புனித அன்னாள் ஆலய பங்கு தந்தை அருட்திரு ஆரோக்கியசாமிதுரை அடிகளார் அவர்களால் சிறப்பு புத்தாண்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கோவில் பிள்ளை ராஜசிங்கம் அவர்களால் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, திருமணமான அனைவரும் கலந்து கொள்ளும் வகையில், விவிலிய இசை நாற்காலி எனும் போட்டி அருட்திரு ஆரோக்கியசாமி துரை அடிகளார் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, சிறுவர், சிறுமியர், இளைஞர், பெரியோர் என அனைவரும் கலந்து கொள்ளும் வகையில், ஓட்டப்பந்தயம், சைக்கிள் பந்தயம், உருளைக்கிழங்கு சேகரித்தல், குண்டு எறிதல், கயிறு இழுத்தல், கபாடி, பாட்டு போட்டி போன்ற பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. நிகழ்வில், காவல்துறை டிஎஸ்பி மாயா, பேராவூரணி வர்த்தக சங்க முன்னாள் பொருளாளர் எஸ்.ஜகுவர் அலி, செய்தியாளர்கள் பழனியப்பன் மற்றும் ராஜா, கவுன்சிலர்கள் காரல் மார்க்ஸ், ஆனந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாலை ஆறு மணிக்கு, பரிசளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்வுக்கு, அருட்திரு அரோக்கிய சாமிதுரை அடிகளார் தலைமை வகித்தார். அருட்சகோதரிகள் ஏஞ்சல் மேரி, ஜெஸி லிட்டில் ரோஸ், ராபர்ட் கிளாரா மற்றும் சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்றோருக்கான பரிசுகளை, ஆர்சி சபை பொருளாளர் பாலன் வழங்கினார். தொடர்ந்து, பள்ளி குழந்தைகளின் நடனம், நாடகம் போன்ற கலை நிகழ்வுகள் நடைபெற்றது. இறுதியாக, அனைவருக்கும் இனிப்பு அரிசி வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆர் சி சபை செயலாளர் 

முனைவர் வேத கரம்சந்த் காந்தி ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top