பேராவூரணியில் அகமது மென்ஸ் கலெக்சன்ஸ் நண்பர்கள் சார்பில் மத நல்லிணக்க சமத்துவ பொங்கல் விழா
ஜனவரி-15, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, அகமது மென்ஸ் கலெக்சன் நிறுவனம் எதிரில், அகமது கலெக்சன்ஸ் நண்பர்கள் சார்பில் மத நல்லிணக்க சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. நிகழ்வுக்கு, பேராவூரணி பேரூராட்சி மன்ற உறுப்பினர் சிவ.சதீஷ்குமார் தலைமை வகித்தார். அகமது கலெக்சன்ஸ் - முகமது ரிபாய், அஸ்வினி பார்த்திபன், ஆசிரியர் நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், இயற்கைக்கு நன்றி செலுத்தும் வகையில், பாரம்பரிய முறைப்படி பொங்கல் தயார் செய்யப்பட்டு, தெய்வத்திற்கு படைத்து, வணங்கினர். நிகழ்வில், பேராவூரணி நகர வர்த்தக சங்க முன்னாள் பொருளாளர் எஸ்.ஜகுபர் அலி, பேராசிரியர் வேத.கரம்சந்த் காந்தி, ஷேக் அலாவுதீன், மன்சூர், சேக் முகமது, சூர்யா, பாலா, டாக்டர் விக்னேஷ், ராம்தாஸ் மற்றும் அகமது கலெக்சன்ஸ் நண்பர்கள் விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை, அகமது கலெக்சன்ஸ் நண்பர்கள் செய்திருந்தனர். பேராவூரணியின் மையப் பகுதியில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், இந்து, கிருத்துவ, இஸ்லாமிய நண்பர்கள் ஒருங்கிணைந்து, மத நல்லிணக்க சமத்துவ பொங்கல் கொண்டாடி இயற்கையை வழிபட்டது, முன்னோடி செயலாக பேராவூரணி பகுதி மக்கள் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
வேத.கரம்சந்த் காந்தி