பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்.
பேராவூரணி மே-19, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுக்கா,பேரைத் துளிர் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் பொன்காடு அரசு பள்ளி மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. பொன்காடு அரசு பள்ளி மாணவிகள், மண்டலம், மாவட்டம் என பல்வேறு நிலையிலான போட்டிகளில் பங்கேற்று, தொடர் வெற்றியை பெற்று வரும் நிலையில், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை கௌரி மற்றும் பள்ளியின் மேலாண்மை குழுத்தலைவர் சரண்யா கணேஷ் ஆகியோர், பள்ளி மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்க வேண்டும் வேண்டுகோள் விடுத்ததையடுத்து, பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் ஐந்து விளையாட்டு மாணவிகளுக்கு பயிற்சிக்கு தேவையான காலணிகள் வழங்கப்பட்டது. நிகழ்விற்கு, பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் நாகேந்திர குமார் தலைமை வகித்தார். அறக்கட்டளை உறுப்பினர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நகரச் செயலாளர் என்எஸ். சேகர் , தொழிலதிபர் விஆர்ஜி.நீலகண்டன் மற்றும் மென்பொருள் வல்லுனர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில், உடற்கல்வி ஆசிரியை கௌரி, பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் சரண்யா கணேஷ், மேலாண்மை குழு துணைத் தலைவர் டாக்டர் அருண் சுதேஷ், மாணவிகள் மற்றும் மாணவிகளின் பெற்றோர் கலந்து கொண்டனர். பேரை துளிர் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் ஆசிரியர் கவின், முனைவர் வேத கரம்சந்த் காந்தி, தொழில் முனைவர் மகாராஜா, சமூக ஆர்வலர் தாமரைச்செல்வன் மற்றும் தொழில் வல்லுநர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுக்கு பங்களிப்பு செய்த சிங்கப்பூர் விஜயகுமாருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.