பேராவூரணி சேதுபாவாசத்திரம் பகுதிகளில் வரும் சனிக்கிழமை (01/07/2023) மின்தடை.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிற காரணத்தால், வருகிற சனிக்கிழமை 01/07/2023 அன்று, பேராவூரணி துணை மின் நிலையத்திலிருந்து செல்லும், பெருமகளூர் ஒட்டங்காடு, திருச்சிற்றம்பலம், வா.கொள்ளைக்காடு ஆகிய மின் பாதையில், பேராவூரணி நகர், ஆவணம், பைங்கால், சித்தாத்திக்காடு, கொன்றைக்காடு, ஒட்டங்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டயங்காடு, மதன்பட்டவூர், திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி, சித்துக்காடு, பெருமகளூர், ரெட்டவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும்,
சேதுபாவாசத்திரம் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் நாட்டாணிக்கோட்டை, குருவிக்கரம்பை, கள்ளம்பட்டி, பள்ளத்தூர் நாடியம் ஆகிய மின் பாதைகளில், குருவிக்கரம்பை, சேதுபாவாசத்திரம், கள்ளம்பட்டி, கழனிவாசல், மருங்கப்ள்ளம், செருப்பாலக்காடு, பேராவூரணி சேதுரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும்
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்" என தெரிவித்துள்ளார்.
முனைவர்
வேத கரம்சந்த் காந்தி செய்தியாளர்