பேராவூரணி அமிழ் விளையாட்டுக் கல்விக் கழகம் "ழ" அறக்கட்டளையோடு இணைந்து நடத்திய ஓகா நாள் - ஓகப் பயிற்சி விழா.

IT TEAM
0





பேராவூரணி அமிழ் விளையாட்டுக் கல்விக் கழகம் "ழ" அறக்கட்டளையோடு இணைந்து நடத்திய ஓகா நாள் - ஓகப் பயிற்சி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.


ஓகப் பயிற்சி ஆசிரியர் ஜெயப்பிரகாஷ் மாணவர்களுக்கு ஓக முறைகளை விளக்கிக்கூறி பயிற்சி வழங்கினார்.


ஓகப் பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மருத்துவர் துரை நீலகண்டன், "ழ"அறக்கட்டளை நிறுவனர் கார்க்கி அசோக்குமார், திராவிடர் விடுதலைக் கழக பொறுப்பாளர் சித. திருவேங்கடம், பேராசிரியர் பா. சண்முகப்பிரியா, ஆசிரியர் காஜா முஹைதீன், திருக்குறள் பேரவையின் செயலாளர் மெய்ச்சுடர் நா வெங்கடேசன் ஆகியோர் விளக்கிக் கூறினர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று ஓகப் பயிற்சி மேற்கொண்டனர்.


மருத்துவர் துரை. நீலகண்டன் கூறியதாவது...

" ஓகப் பயிற்சி உடற்பயிற்சி மட்டுமல்ல இது ஒரு சிகிச்சை முறை.  இந்த பயிற்சிகளை முறையாக செய்யும்பொழுது நீண்ட காலத்திற்கு இளமையோடு இருக்கலாம். பல்வேறு நோய்களிலிருந்தும் விடுபடலாம். நாள் முழுவதும் ஊக்கத்தோடு செயலாற்ற ஓகப் பயிற்சி உதவுகிறது" என்றார்.


நிகழ்வில் தோப்புக்கரணம் போடுவதன் நன்மைகள் குறித்து தோப்புக்கரண பயிற்சியாளர் மணிகண்டன் மாணவர்களிடம் விளக்கி கூறினார்.  தோப்புக்கரணம் என்பது தண்டனை அல்ல, அது மதச் சடங்கும் அல்ல நமது முன்னோர்களின் எளிமையான ஓகப் பயிற்சி. காலையில் எழுந்தவுடன் முறையாக தோப்புக்கரணம் போடுவதால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு செயல்படலாம் என்றார்.  மாணவர்கள் பெற்றோர்கள் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் உரிய முறையில் தோப்புக்கரண பயிற்சியை செய்தனர்.


ஓகப் பயிற்சி என்பது தமிழ் சித்தர்கள் உலகத்திற்கு வழங்கிய கொடை. மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்வதற்கும், மனம், புத்தி, செயல் இணைந்து வாழ்வதற்கும், நோயற்ற வாழ்வுக்கும் ஒவ்வொருவரும் ஓகப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.


முன்னதாக விளையாட்டு கழக பயிற்றுநர் தோழர் மருத உதயகுமார் வரவேற்றார்.  "ழ" அறக்கட்டளை பொறுப்பாளர் பெஸ்ட் குமார் நன்றி கூறினார்.


பயிற்சியின் நிறைவில் மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top