திருநெல்வேலி - சென்னை தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
வருகின்ற 30.07.2023 ஞாயிற்றுக்கிழமை வண்டி எண் : 06004 திருநெல்வேலி - தாம்பரம் ஒருவழி சிறப்பு ரயிலினை விருதுநகர் மானாமதுரை காரைக்குடி திருவாரூர் வழியாக தெற்கு ரயில்வே இயக்குகிறது.
30.07.23 (ஞாயிறு) திருநெல்வேலியிலிருந்து மாலை 3:40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:15 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை,சீர்காழி, சிதம்பரம்,கடலூர் துறைமுகம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதன் முன்பதிவு நாளை காலை 8-00 மணிக்கு தொடங்குகிறது