பேராவூரணி பேரூராட்சியில் 77வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கொடியேற்றி கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், பேரூராட்சி பெருந்தலைவர், துணைத் தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்கள்,தன்னார்வலர்கள், அலுவலகப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
முன்னாள் இராணுவத்தினர், தன்னார்வளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
பேரூராட்சி பயன்பாட்டிற்காக புதிதாக வாங்கப்பட்ட டிராக்டர் கொடியசைத்து பயன்பாட்டிற்கு துவங்கி வைக்கப்பட்டது.
மேலும்சுமார் 75 மரக்கன்றுகள் நடப்பட்டது.
நன்றி-செயல் அலுவலர்,பேரூராட்சி துணை பெருந்தலைவர் ,பேரூராட்சி கவுன்சிலர்,பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள்.