பேராவூரணி ஜே.ஸி.கே சி.பி.எஸ்.இ வித்யாலயா பள்ளியில் ஓணம் பண்டிகை விழா நடந்தது.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஸ்ரீதர் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கேரளா பாரம்பரிய நடனம் திருவாதிரை நடனம் நடைபெற்றது. மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக அத்தப்பூ கோலமிட்டு, மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் கதகளி மற்றும் பாரம்பரிய உடை அணிந்து மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியர் நிஷாந்தினி ஓணம் பண்டிகை பற்றி மாணவர்களுக்கு விளக்கி பேசினர்.
இதில் பள்ளி நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, அறக்கட்டளை பொருளாளர் அஸ்வின்கணபதி, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.