பேராவூரணி வெங்கடேஸ்வரா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு குறித்த மாநில அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்வுக்கு, கல்லூரி முதல்வர் முனைவர் மோகனா முன்னிலை வகித்தார். கல்வி புலத்தலைவர் முனைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக முனைவர் வேத கரம்சந்த் காந்தி மற்றும் முனைவர் ராம்குமார் கலந்துகொண்டு செயற்கை நுண்ணறிவு குறித்தும், செயற்கை நுண்ணறிவு பயன்பாடான சாட் ஜிபிடி குறித்தும் நேரடி விளக்கம் செய்து காட்டினர். நிகழ்வில், கல்வியியல் கல்லூரி முதல்வர், பிற துறை பேராசிரியர்கள், மாணவ மாணவியர் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர். முன்னதாக கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவர் பேராசிரியர் மகேஸ்வரி வரவேற்புரையாற்றினார். இறுதியாக, கணினி அறிவியல் துறை தலைவர் பேராசிரியர் கீதா நன்றி கூறினார். நிகழ்வுகளை, கணினி பயன்பாட்டியல் துறை மாணவிகள் அஜிஷா பானு மற்றும் அஜிமதுல் மர்லியா தொகுத்து வழங்கினர்.
பேராவூரணி வெங்கடேஸ்வரா கல்லூரியில் மாநில அளவிலான செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கம்.
ஆகஸ்ட் 29, 2023
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க