வேளாண் பொறியியல் துறை, பட்டுக்கோட்டை உதவி செயற்பொறியாளர் ஏ.செங்கோல் வரவேற்றார்.
பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு பவர் டில்லர் வழங்கி,
அரசின் நலத்திட்டங்கள் பற்றி விளக்கிப் பேசினார்.
நிகழ்ச்சியில், பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர்,
பேராவூரணி வேளாண் உதவி இயக்குநர் (பொ) எஸ்.ராணி, சேதுபாவாசத்திரம் வேளாண் உதவி இயக்குநர் ஜி.சாந்தி,
வேளாண் பொறியியல் துறை, சேதுபாவாசத்திரம் இளநிலைப் பொறியாளர் எஸ்.செந்தில்குமார், பேராவூரணி உதவிப் பொறியாளர் மணிமாறன், வேளாண் உதவி அலுவலர்கள் கார்த்திகேயன், கோகிலா, கவிதா, வர்ஷா, ரேவதி, தீபா தோட்டக்கலைத்துறை
பி.முத்துவேல், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பொன்.செல்வி, மற்றும் திரளான விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், பேராவூரணி ஒன்றியத்திற்கு 8, சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திற்கு 5 என, தலா ஒவ்வொன்றும், ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 500 மதிப்பிலான, மொத்தம் ரூ.28 லட்சத்து 79 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் வழங்கப்பட்டது. இதில், சிறு, குறு விவசாயிகளுக்கு தலா ரூ.85 ஆயிரம், ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 19 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து, வேளாண் துறை, வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள், விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.