மகாகவி பாரதியாரின் 102 ஆவது நினைவு நாளையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பாரதியின் முழு உருவச் சிலைக்கு, பேராவூரணி பாரதி கலை இலக்கியப் பேரவை சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பாரதி கலை இலக்கியப் பேரவை தலைவரும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான கே.வி.கிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் வீர.சந்திரசேகரன், சமூக ஆர்வலர் ஜெயலட்சுமி, ஆயர் த.ஜேம்ஸ், கவிஞர் கான் முகமது, பொன்.நடராஜன், ஆசிரியர் ஸ்டீபன் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக பாரதி கலை இலக்கியப் பேரவை துணைச் செயலாளர் சா.ஜகுபர் அலி நன்றி கூறினார்.
இதேபோல், பல்வேறு அமைப்புகளின் சார்பில் மாலை அணிவித்து செலுத்தப்பட்டது.