புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் நடைபெற்ற முதல் மாநில அளவிலான ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பேராவூரணி கிழக்கு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கட்டா பிரிவில் மு.அபிஜித் மற்றும் நீ.நித்தியசீலன் ஆகியோர் முதல் பரிசையும் ரா.ஆதித்யா ஜெ.நஜுபுதீன் ஆகியோர் இரண்டாவது பரிசையும்
குமிட் பிரிவில் ரா.ஆதித்யா, நீ.நித்தியசீலன் ஜெ.நஜுபுதீன் ஆகியோர் மூன்றாம் பரிசினையும் பெற்றனர்.
பரிசு பெற்ற மாணவர்களையும் பயிற்சி வழங்கிய தலைமை பயிற்சியாளர் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களையும் துணை பயிற்சியாளர் திரு சந்துரு அவர்களையும் பள்ளியின் சார்பில் தலைமையாசிரியர்(பொ)செ.ராகவன்துரை மற்றும் ஆசிரியர்கள் திரு.சுரேந்தர்,திருமதி.பாலாதேவி திருமதி.செல்வராணி மற்றும் திருமதி பிரதீபா ஆகியோர் பாராட்டி கௌரவபடுத்தினர்.