பேராவூரணி செப்-15, தஞ்சாவூர் மாவட்டம், பழைய பேராவூரணியில் கவுன்சிலர் ஆனந்தன் தலைமையில் நகர சபா கூட்டம் நடைபெற்றது. அதில், பழுதடைந்த கிராம நிர்வாக அலுவலகத்தை புதுப்பிப்பது, குளக்கரையை சுத்தம் செய்து நடைபாதை அமைத்து தருவது, பெருமாள் கோயில் வளாகத்தை சீர் செய்து சுற்று பிரகாரம் அமைத்து தருவது, சிறுவர் பூங்கா அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் 25க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முனைவர் வேத கரம்சந்த் காந்தி செய்தியாளர்