பேராவூரணி அருகே செங்கமங்கலம் அம்மையாண்டி மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில சதுரங்கம், தடகள ஆகிய போட்டிகளுக்கு தேர்வான மாணவர்களுக்கு பாராட்டு.
தஞ்சாவூரில் கடந்த மாதம் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் சதுரங்க போட்டிகள் நடைபெற்றது. அனைத்து பள்ளிகளின் இருந்து மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். இதில் செங்கமங்கலம் அம்மையாண்டி மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி தேவகாஞ்சனா சதுரங்க போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான சதுரங்கப் போட்டிக்கு தகுதி பெற்றார். அதேபோல் இப்பள்ளி 9ம் வகுப்பு மாணவர் கிருத்திஸ்வரர் தடகளப் போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றார். பள்ளி தாளாளர் சாமியப்பன், பள்ளி முதல்வர் கணேசன், மூவேந்தர் அறக்கட்டளை உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், ஆசிரியர்கள் ஆகியோர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வான மாணவர்கள் தேவகாஞ்சனா, கிருத்திஸ்வரர், இம்மாணவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பாராட்டி வாழ்த்தினர்.