வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அபாகஸ் பயிற்சி தொடக்கம்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அபாகஸ் பயிற்சி தொடக்க விழா நேற்று ( 15.09.23) நடைபெற்றது.
பேராவூரணி வட்டார கல்வி அலுவலர் கலாராணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஹபீபா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சீ.கௌதமன், பள்ளி மேலாண்மை குழு தலைவி ஜெசிரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர்கள் கற்றுக் கொள்ள அபாகஸ் மணிச் சட்டங்களை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சீ.கௌதமன் தனது சொந்த செலவில் வாங்கித் தருவதாக உறுதி அளித்தார்.
நிகழ்வில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஹபீபா , மாணவர்கள் அனைவருக்கும் எண்சுவடி வழங்கினார்.
நிகழ்வில், பேராவூரணி தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் செயலாளர் வெங்கடேசன், அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் மருத உதயகுமார் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆசிரியர் காஜா முகைதீன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
நிறைவாக ஆசிரியர் ரேணுகா நன்றி கூறினார்.