பேராவூரணி அருகே உள்ள வளப்பிரமன்காடு கிராமத்தில் நெல் சாகுபடியில் முன் தயாரிப்பு தொழில்நுட்பங்கள் குறித்த ஆலோசனை நிகழ்ச்சி ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் நெல் சாகுபடியில் மண் வள மேலாண்மை, ரகத் தேர்வு, விதை நேர்த்தி,நுண்ணூட்ட பயன்பாடு, இயற்கை வழி ஊட்டச்சத்து தயாரித்து பயன்படுத்தும் முறைகள்,ஊட்டச்சத்து மேலாண்மை , போன்ற பல்வேறு தொழில் நுட்பங்கள் குறித்த விவசாயிகளின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு, வேளாண் வல்லுநர் திரு. செந்தில் அவர்கள் விளக்கம் அளித்து ஆலோசனை வழங்கினார் , ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மாவட்ட மேலாளர் இரா.அன்பழகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.
இந்நிகழ்ச்சியில் வளப்பிரமன்காடு பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.