பேராவூரணி அருகே ஆவணம் டாக்டர் கலாம் பார்மசி கல்லூரியில் 2023-24 ஆம் ஆண்டுக்கான டிப்ளமோ பார்மசி துவக்க விழா நடந்தது.
நிர்வாக இயக்குநர் அஜித்டேனியல் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் அன்பழகன் முன்னிலை வகித்தார். துறை தலைவர் லோகநாதன் வரவேற்றார். தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஸ்ரீதர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். மேலும் கல்லூரியின் துணை முதல்வர் பரிமளாதேவி, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மதிவாணன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி விரிவுரையாளர் ஆஷிகா நன்றி கூறினார்.
செய்தி: முனைவர் வேத கரம்சந்த் காந்தி.
#peravurani #peravuranitown