தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், அம்மையாண்டி ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட, புதிய அங்காடி கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது.
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் கலந்து கொண்டு, ரூபாய் 14 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்காடி கட்டடத்தை திறந்து வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வேந்திரன், தவமணி, திமுக மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், திமுக ஒன்றிய செயலாளர் இளங்கோவன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் குருசாமி, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் உ.துரை மாணிக்கம்,
ஆர்.கே.பி.குமார்,
மல்லிகை வை.சிதம்பரம் மற்றும் கிராம பிரமுகர்கள், பொதுமக்கள் கூட்டுறவு சங்கச் செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.