பேராவூரணி, செப் 29
பேராவூரணி டாக்டர் ஜே.ஸி.குமரப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் லயன்ஸ் கிளப், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து கண் பரிசோதனை முகாம் நடந்தது.
கிளப் தலைவர் சிவநாதன் தலைமை வகித்தார். செயலர் ராஜா வரவேற்றார். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பேராவூரணி கிளை மேலாளர் இளமாறன் குத்து விளக்கேற்றி கண் பரிசோதனை முகாமைத் தொடங்கி வைத்தார். மாவட்ட அவை கூடுதல் செயலர் ராமமூர்த்தி, மாவட்ட அவை இணை பொருளர் கனகராஜ், மண்டலத் தலைவர் ராமஜெயம், வட்டாரத் தலைவர் குட்டியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
முகாமில் 553 பேர் கலந்து கொண்டு இலவச கண் பரிசோதனை செய்து கொண்டனர். அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் இலவசமாகவும், கண் கண்ணாடி சலுகை விலையிலும் வழங்கப்பட்டது. இவர்களில் கண் பார்வை குறைபாடு உடைய 209 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதில் கிளப் இயக்குநர்கள் வைரவன், தமிழ்செல்வன், கோவிதரன், பன்னீர்செல்வம், விநாயமூர்த்தி, ராமக்குமார், அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், செல்வகுமார், டாக்டர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொருளர் பழனியப்பன் நன்றி கூறினார்.
முனைவர் வேத கரம்சந்த் காந்தி செய்தியாளர்