தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள், அரசு ஆண்கள் பள்ளித் தலைமையாசிரியர் சி.மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது.
முதல் நாள் நிகழ்ச்சியில், மாவட்டக்கல்வி அலுவலர் மெ.கோவிந்தராசு கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.
காவல்துறை ஆய்வாளர் காவேரி சங்கர், கலந்து கொண்டு, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இரண்டாம் நாள் போட்டிகள் நிறைவுற்றது, பரிசளிப்பு விழாவில், சட்டமன்ற என் அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்து பாராட்டினார்.
இப்போட்டிகளில், ஆண்கள் பிரிவில் அதிக புள்ளிகளை பெற்று புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
பெண்கள் பிரிவில், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும், புனல்வாசல் புனித அன்னாள் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
அதேபோல், இருபாலர் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பேராவூரணி அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்றனர். நிறைவாக உதவி தலைமையாசிரியர் க.சோழபாண்டியன் நன்றி கூறினார்.