உலக தேங்காய் தினத்தை முன்னிட்டு பேராவூரணி டாக்டர் ஜே சி குமரப்பா கல்வி குழுமத்தில் உலக தேங்காய் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு,
டாக்டர்.ஜே.ஸி.குமரப்பா கல்விக் குழுமம் சேர்மன் முனைவர் ஸ்ரீதர் அவர்கள் தலைமை வகித்தார். ஜே சி கே சென்டினரி பவுண்டேஷன் பொருளாளர் அஸ்வின் கணபதி முன்னிலை வைத்தார். பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) திருமதி S.ராணி அவர்கள் தென்னை விவசாயிகளை பாராட்டி கெளரவித்தார். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பேராவூரணி கிளை முதன்மை மேலாளர் திரு.R.ராமமூர்த்தி கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். முன்னதாக பள்ளி முதல்வர் எஸ் ஷர்மிளா வரவேற்புரை ஆற்ற, முதுகலை ஆசிரியர் என் பழனிவேல் நன்றி கூறினார்.