தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ஆண்டிக்கச்சல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், தீத்தடுப்பு செயல் விளக்கம் மற்றும் வடகிழக்கு பருவமழை போலி ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.
பள்ளி தலைமைஆசிரியை
இ.அன்பு மேரி வரவேற்றார். பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர் சீனிவாசன் தலைமையிலான குழுவினர், தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அதனை எதிர்கொள்வது, மழை, வெள்ள காலங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது, வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பன உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை ஆசிரியர்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் வழங்கினர். நிறைவாக ஆசிரியர் கே. நீலகண்டன் நன்றி கூறினார்.