பேராவூரணி, செங்கமங்கலத்தில் அமைந்துள்ள 110/33 11-கேவி துணை மின் நிலையத்தில், பேராவூரணி உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் தலைமையில் ஆயுத பூஜை விழா நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு, உதவி மின் பொறியாளர்கள் விவேகானந்தன் மற்றும் ஹரிசங்கர், மின் அலுவலர்கள் சீனிவாசன், தாஸ், சுவாமிநாதன் மற்றும் லெனின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்வில், மின் உபகரணங்களுக்கு பூசை செய்யப்பட்டு, சுண்டல் பரிமாறப்பட்டது.