பேராவூரணி அரசு மருத்துவமனையில் கோக்கனட் சிட்டி லைன்ஸ் சங்கம் காலை உணவு வழங்கல்
ஆகஸ்ட் 9, பேராவூரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் கிளப் சார்பாக பேராவூரணி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் 200 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு, கோக்கனட் சிட்டி லயன்ஸ் சங்க தலைவர் ஏ எஸ் ஏ தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். இதில், சாசனத் தலைவர் எம். நீலகண்டன் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
மேலும், சாசன பொருளாளர் மைதீன், ரமேஷ், ராஜ்குமார், சபரி குமார் , ராஜசேகர், குமார் டிவி சென்டர் பழனிவேல், லட்சுமி மெடிக்கல்ஸ் பாலமுருகன், பாத்திர கடை குமார் ,ஆசிரியர் ரவி , பன்னீர்செல்வம், பெரியசாமி, பிளாக் அண்ட் எல்லோ ஜவுளிக்கடை உரிமையாளர் சரவணன்,பொருளாளர் சிவானந்தம், நிர்வாக அலுவலர் குமரன் மற்றும் பல அரிமா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முனைவர்
வேத கரம்சந்த் காந்தி செய்தியாளர்