மாநில அளவிலான கபாடிப் போட்டிக்கு பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தேர்வு

IT TEAM
0

 


மாநில அளவிலான கபாடிப் போட்டிக்கு

பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தேர்வு 


தஞ்சாவூர், அக்.3 - 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி, மாநில அளவிலான கபடி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு செவ்வாய்க்கிழமை காலை பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. 


தஞ்சாவூர் மாவட்டம், 

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கழனிவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள குமார் - சங்கீதா தம்பதி இவர்களது மகள் ஜனரஞ்சனி, பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். 


விளையாட்டில் ஆர்வம் உடையவராக விளங்கிய ஜனரஞ்சனிக்கு, உடற்கல்வி ஆசிரியர் ரெங்கேஸ்வரி, அன்னமேரி, நீலகண்டன், கபடி பயிற்சியாளர் கார்த்திக் ஆகியோர் சிறப்பு பயிற்சி அளித்தனர். பல்வேறு இடங்களில் நடைபெற்ற கபடி போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவி ஜனரஞ்சனி, மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்று தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றார். 


இதில், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில், மாநில அணியில் பங்கேற்க மாணவி ஜனரஞ்சனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் தேசிய அளவிலான 

போட்டிகளில், தமிழக அணி சார்பில் மாணவி ஜனரஞ்சனி பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில், மாநில அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவி ஜனரஞ்சனிக்கு பள்ளியில், பள்ளி தலைமை ஆசிரியர் தனலெட்சுமி தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர் முன்னிலை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவி ஜனரஞ்சனி, கபடி பயிற்சியாளர் கார்த்திக் ஆகியோரைப் பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். 


அப்போது, உதவி தலைமை ஆசிரியர் சுப.கார்த்திகேயன், உடற்கல்வி ஆசிரியர்கள் ரெங்கேஸ்வரி, அன்னமேரி, நீலகண்டன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அம்பிகா, ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top