பேராவூரணியில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தஞ்சாவூர், அக்.2 -
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பேராவூரணியில் மகாத்மா காந்தி திருவுருவச் சிலைக்கு, சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
லயன்ஸ் சங்கம் சார்பில், தலைவர் சிவநாதன் தலைமையில், மாவட்ட அவை இணைச் செயலாளர் எஸ்.கே.ராமமூர்த்தி, வட்டாரத் தலைவர் குட்டியப்பன், செயலாளர் ராஜா, பொருளாளர் பழனியப்பன், கோவிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிங்காரம் தலைமையில், கே.வி.கிருஷ்ணன், பொன்.நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் மாலை அணிவித்தனர்.
தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில், டெல்டா ராஜவிக்னேஷ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில், செயலாளரும், ஊராட்சி மன்றத் தலைவருமான நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், பொருளாளர் சிவானந்தம், நிர்வாக அலுவலர் குமரன், நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், ஜெய்சங்கர், பாண்டியராஜன், நீலகண்டன், ரமேஷ், குமார், ராஜ்குமார், ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மரக்கன்றுகள்
தொடர்ந்து, கொரட்டூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, 30 தென்னங்கன்றுகள் நடப்பட்டது.
முனைவர்
வேத கரம்சந்த் காந்தி செய்தியாளர்