பேராவூரணி ஆகஸ்ட்-15, மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு, பேராவூரணி ஆலமரத்து விழுதுகள் நண்பர்கள் அமைப்பினர் சார்பில், செங்கமங்கலத்தில் உள்ள சிவன் கோயில் வளாகம் தூய்மை செய்யப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்விற்கு, ஊராட்சி மன்ற தலைவர் ஈகை செல்வம் தலைமை வகித்தார். நிகழ்வில், மெய்ச்சுடர் வெங்கடேசன், ஆசிரியர் காஜா மைதீன், தோப்புக்கரணம் மணிகண்டன், பேராசிரியர் சண்முகப்பிரியா, குழந்தைகள் மற்றும் பேராவூரணி ஆலமரத்து விழுதுகள் நண்பர்கள் கலந்து கொண்டு வளாகத் தூய்மை செய்து மரக்கன்றுகளை நட்டனர். இறுதியாக, பேராவூரணி ஆலமரத்து விழுதுகள் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எல்ஏஎம். சாதிக் அலி நன்றி கூறினார்.
முனைவர் வேத கரம்சந்த் காந்தி செய்தியாளர்