அரசுப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
தஞ்சாவூர், அக்.2 -
உலக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில், நாட்டு நலத்திட்ட மாணவர்கள், பேராவூரணி லயன்ஸ் சங்கம் இணைந்து
மரக்கன்றுகளை நட்டார
.
பள்ளி தலைமையாசிரியர் வீ.மனோகரன்,
திட்ட அலுவலர் ஆர்.நீலகண்டன் முன்னிலை வகித்தனர். இதில், பேராவூரணி லயன்ஸ் சங்கத்
தலைவர் கே.சிவநாதன்,
செயலாளர் ஜி.ராஜா,
மாவட்ட அவை கூடுதல் செயலாளர் எஸ்.கே. ராமமூர்த்தி, வட்டாரத் தலைவர் கே.குட்டியப்பன்,
எம்.தமிழ்செல்வன், உறுப்பினர்கள் பி.கோவிதரன், எம்.கதிரவன்,
வி.கே.எம்.தணிகைமணி
ஆசிரியர்கள் பன்னிர்செல்வம்,
பாரதி மற்றும் சங்க உறுப்பினர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பள்ளி வளாகம், பொது இடங்களில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டனர்.
முனைவர்
வேத கரம்சந்த் காந்தி
செய்தியாளர்